நிதர்சன நிஜம் சொட்டுதே
கார் குழலில் கரம் நுழைத்து
ஆழ் மனதில் தீ மூட்டிய கள்வனே !
ஊடலின் சுகம் கற்பித்த இனியவனே !
என் இச்சைக்கு இசைவித்த காதலனே!
இந்த மாதின் வாழ்வென்பது யாது
அண்மையில் நீ இல்லாத போது ;
நம்மிடையில் பேதங்கள் தானேது
ஒருவரை ஒருவர் மதிக்கின்ற போது .
என் புனர்ஜென்ம நுழைவாயிலில் உவகையளிக்க
காத்திருப்பதும் உன் புன்சிரிப்புதான்
;
என் பூர்வஜென்ம வெளியேற்றில் மகிழ்வித்து
அரவணைத்ததும் உன் புன்சிரிப்புதான்
.
இப்பிறவி இமை இரண்டு இன்புறுவதும் ;
உயிர் நாடியின் சப்தமது சங்கீதமாவதும்;
இருதயத்தில் நிதமொரு
பூ பூப்பதும்;
உன் இதழ் மொழியும் சிருங்கார புன்னகையால்தான்.
நம் பாரதியின் மனம் கவர்ந்த கண்ணம்மா
உயர்வானாலும் நிரந்தர
நிழல் மட்டுமே ...
உன்னவளின் உளம் கவர்ந்த கண்ணாளா
உன்னில்மட்டும் நிதர்சன நிஜம் சொட்டுதே...
என் பெண்மையை நீ உணர்த்திய
அந்நொடிகள்
பிரபஞ்சம் வென்ற தோரணையில் சிலிர்க்குதடா
- நம்
கலவியல் சமயத்துஷ்ணக்
காற்றொலிகள்
மூச்சுக் காற்றாகி
என்னை இயக்குதடா !
No comments:
Post a Comment