என் அருமை விண்வெளிப் புயலே
அறுபத்தி இரண்டில் ஜனித்த அற்புத
அணங்கே...
கர்னல் ஈன்ற மெய்யானக் கல்பனையே!
மனிதக் களிறினமே அண்ணாந்து பார்த்த ஆகாயத்தை
அனாயாசமாக வென்று எக்காளம் இசைத்த விண்வெளிப் புயலே !
பஞ்சாபில் இலங்களைத்த பறவையே
டெக்சாஸ் முதுகளைத்த பதுமையே
கொலராடோவில் முனைவரித்த முருகே !
மாதர்தம் மூடநம்பிக்கைப் பூர்வீகங்களை புறமுதுகிட்டு
ஓடவைத்த முழுநீள முகவரியே - விண்வெளியை
வீழ்த்திய இந்திய பெண்ணினத்தின் முதல்வரியே!
பல்வகை விருதுகளை அள்ளிக்குவித்த சகோதரியே....
குவித்த விருதுகளுக்கு பெறுமதியளித்த போதனையே...
எங்கள் ஈடில்லாச் சாதனையே!
தொண்ணூற்றி ஏழாமாண்டு STS 87 இல் தொடங்கி
இரண்டாயிரத்தி மூன்றாமாண்டு STS 107 வரையில்
ஆகாயத்தை ஆண்டுதான் விட்டாயடிஅட்சியே!
அறியாத கல்பனையே!
உனை தேசியமயமாக்கி நேசிக்கிறோம்....
இழந்து விட்ட உன் துடிப்பை உளமார சுவாசிக்கிறோம்...
எங்கள் இந்தியக் கற்பனையை பாதியிலே
பரிவின்றி அபகரித்த நடுவனே!
நீ விழுங்க மறந்த சேதிகேள்முதல்வனே...
அவள் குறுநகையை பிறைதோரும் காண்கின்றோம் இறைவனே....
இன்றும் ஒரு பிறைகண்டே விழிநீர்
தெளிக்கிறேன் பகைவனே!
**************-----------------------------------------------------------------------------**************
No comments:
Post a Comment