தரமணி
சென்னைப் புத்தகத்தின் அதி முக்கிய பக்கங்களை தனதாக்கிக் கொண்டவள் இந்தத் தரமணித் தாய். இன்று - ஆண், பெண் பேதங்களின்றி - பல கணினி வாசிகளின் முதல் புகுந்த வீடாகி விட்டவள். பணி நிமித்தமாக கணினிப் பிரவேசம் செய்தபடியே, இந்தத் தாயின் வாசத்தை உள் வாங்கியவள் நான். அங்குள்ள பன்நாட்டு நிறுவனங்கள் சாராத தரமணிக்காரர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் பெற்றவள். அன்நிறுவனங்களற்ற தரமணி எப்படியிருக்குமென யோசித்துப் பார்த்துள்ளேன். தன் அபார வளர்ச்சியைப் பற்றிய அந்தத் தாயின் மனநிலை , தன் சுயத்தைக் காலத்திற்க்கேற்ப்ப வளைத்துக் கொண்டு மனிதர்களை அரவணைக்கும் அவளது கருத்துக்கள் என்னவாக இருக்குமென்ற ஒரு சிறிய கற்பனை....
அவள்....
நம்மிடம்
உள்ள கோளாறுகளுக்குக்
கொள்ளி
வைக்க முனைகின்றாள்!
அவள்....
தரமணி....
கௌரவம்
விற்றுக் கைப்பேசி
வாங்கும்
மனிதனைப் பார்த்துச் சிரிக்கின்றாள்....
அவளது
கொள்ளி வைப்புக் கேள்விகளும்
கொள்ளி
வைப்புக் காரணங்களும்
இதோ
நம் பார்வைக்கு.....
ஜனனம்
தொட்டு என்னுடன் உறவாடும்
என்
கூரை வீட்டுப் பிள்ளைகளின்
முதலாளுமையை
- பிழைப்புத் தேடித்
தஞ்சம்
புகுந்த மாடி வீட்டுப்
பிள்ளைகளுக்கு
சாசனமிட்ட
சாமான்ய
சானக்கியார்களே !
மேல்
தட்டுப் பகட்டுகளின் நிழலில்
மறைந்துப்
போகும் நிஜங்களாகப்
பிறந்தாலும்....
முகில்
கிழிக்கும் கட்டிடங்களின் பிறப்பில்
மறந்துப்
போகும் குடுசைகளில்
வாழ்ந்தாலும்....
பண
வெள்ளத்தில் மூழ்காத
உயிர்களாக - பிரபஞ்சத்தை வெல்லும்
தரமான
மனித அணிகளை அடக்கியவள் நான்!
என்
மடி தவழ்ந்து, மார்பகங்கள் பிடித்து
முன்னேறி,
உச்சந்தலை வெற்றித் தொட
எத்தனித்த
என் தரை – மணிகளின்
அடையாளத்தை, பணக்கூழில்
அமிலமூற்றி
அழிக்கப்
பார்க்கிறீர்கள்!
என்னை
- என்னுள் தஞ்சம் புகுந்த
அயல்
பிரதேச பகட்டாளிகளின்
மாளிகையாக்கி
விட்டீர்கள்!
எந்த
ஒரு ஊரும் - தினம் வந்து போகும்
தபால்காரனுக்குச்
சொந்தமாகாது!
தினம்
வந்து போகும் - மடிக்கணினி
வாதிகளுக்கு என்னைச் சொந்தமாக்கும்
உரிமையை
உங்களுக்குத் தாரைவார்த்தது யார்?
பன்நாட்டு
நிறுவனங்களின் அபத்தம்
சுமந்த
பூமிப்பிரவேசம்தான் - என்னை
உருவாக்கியதென்று
களிக்கும்
உங்கள்
ஆனவமா?
முற்றும்
அறிந்த மூடர்களே!
உங்கள்
நிலப்பிரவேசத்தின்
முன்
நான் சுடுகாடாகத் திகழ்ந்தேன்
எனத்
தெரிவித்தவர் யார்?
உம்மைப்
போலவே
காந்திக்
காகிதத்தின் மேல் காமம்
கொண்டக்
காரியக்காரர்களா?
உங்கள்
அனைவரின் வாழ்நாட்களைச்
சேர்த்தாலும்
– என் பயணக் கோலத்தின்
ஒரு
புள்ளியாக முடிந்துவிடும்!
பல்லாயிரம்
தமிழ்க் குடிகளைக்
கண்டவள்
நான்!
இன்று
வந்த நீங்கள்...
என்னை வெலிநாட்டவரின்
இந்தியக் களமாக்கிவிட்டதாகப்
பறை சாற்றுகின்றீரோ?
என்னை
நகரமாக்கி காட்டிவிட்டதாகப்
பெருமை
கொள்கின்றீரோ?
உண்மையில்
என்னை நரகமாகக்
காட்டியுள்ளீர்கள்
மனிதர்களே!
பாரபட்சம்
பார்க்கும் நரகமாக....
பணமுள்ளோரை
மட்டுமே ஆதரிக்கும் நரகமாக....
அயல்நாட்டு
வரைபடத்தில் உங்களைச்
சேர்த்துக்கொள்ள,
என பரப்பு வெளியை
ஆக்கிரமித்த
வெறியர்கள் நீங்கள்!
வெளியுரவுச் சேதிகளில் உங்கள்
அடையாளங்கள் காண, என் உள்ளுணர்வை
சிதைக்க முயலும் உத்தமர்கள் நீங்கள்!
ஒரு
வகையில் சுதந்திரத் தரமணியை
ஆக்கிரமித்த
இந்திய வெள்ளையர்கள்!
எனது
மணல் பரப்பில் தரமணிவாசிகள் பலருண்டு...
நெடுநாட்களாக
அவர்களைச் சுமக்கும் தாய் நான்!
இன்றும்....
என்
உடலின் ஒரு பக்கம் அவர்களைச் சுமந்தபடி
மறுபக்கத்தை
மட்டுமே உங்கள்
இயந்திரவாதிகளுக்குக்
குத்தகை விடுத்துள்ளேன்!
ஆத்திரமல்ல
உங்கள் மீது....
ஆதங்கம்....
என்
சுயத்தை மாற்ற முனையும்
மனிதர்களென்ற
ஆதங்கம்!
நாம்
ஒன்றுக்கூடிப் பயணிக்கலாம்....
பரஸ்பர
பயன் கொள்ளலாம்....
ஒரு சில
நாட்களின் பயணம்
நமை
நட்பு பாராட்ட வைக்கலாம்...
மெய்
நடப்பில் உற்றாராக்கி விடாது!
பிரிவெனும்
ஆற்றில் தேவைத் துடுப்புபைப்
போட்டு, பரஸ்பர உயர்வு காணக்
கைக்கோர்த்துப் படகோட்டுகிறோம்....
நீங்கல் - இந்த ஆற்றுக்கு
பட்டா கேட்பதில் நியாயமில்லை!
உங்கள் வளர்ச்சி - என்
சுயத்தின் சாவி கேட்பதில் நீதியில்லை!
ஒன்று
நினைவிருக்கட்டும்....
என்
ஆன்மாவின் சுயம் என் தரமணிவாசிகள் மட்டுமே!
நீங்கள்
- என் ஆத்ம வேடந்தாங்கலை உபயோகித்துச்
செல்லும்
தற்காலிகப்
பட்சிகள்!
சமகால
அந்நியர்கள்!
தாயன்புடன்,
உம்மையும்
அரவணைக்கும் நான்.
தரமணி.
தரமணி.
***********************
------------------------ ***********************
வணக்கம்
ReplyDeleteகற்பனையில் ஓதிய வரிகள் கவியாக பிறந்த விதம்
கண்டு மகிழ்ந்தேன்... மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:
வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-