மனிதர்களாகிய நாம் பல பூதாகரமான
நடப்புகளை மிகச்சாதாரண ஒன்றாக பார்க்கப்
பழக்கப்பட்டு விட்டோம்.இருப்பினும் சில பாதிப்புகள் மனதை விட்டு என்றுமே வெளியேறாத
ரணமாகி விடுவதை மறுக்க முடியாது. அப்படிப்பட்ட மதிப்பைப் பெற்று விடும்
துயரங்களுள் கருக்கலைப்பும் ஒன்று. அதிலும் சிறிதும் எதிர்பாராமல் இயற்கையாகவே
கலையும் கர்ப்பம் , இரு உள்ளங்களை
மரணத்தின் விளிம்பில் நிறுத்தி மீண்டும் வாழ்க்கைக்குள் அழைத்து வரும் கொடிய சக்தி
பெற்றது. அப்படிப்பட்ட நிலையைக் கடந்த பல பெற்றோரின் எண்ண ஓட்டம்தான் மண்வாசனை வீசும் இந்த வரிகளில். ஏழு வாரங்களில்
தங்கள் முதல் கருவை இழந்த பெற்றோரின் மனக்கூவல்கள் இதோ ....
கோழி முழிச்சு முழுசா கூவல ;
வீட்டு அலறிமணி சோம்பல் முறிக்கல ;
உசிரா நீ வர சேதி தெரிஞ்சதுல
;
தூக்கங்கூட பாய் விரிச்சு தூங்க போகல.
ஆகாசம் எட்டி பார்க்குது மொத முறையா !
சூரியன் கதிர் வாழ்த்தனுப்புது மொத
முறையா !
மனசு நெறஞ்சு மௌனமானேன் மொத முறையா ! - ஒங்கப்பன்
தாயா அனச்சுகிட்டான் – இது மொத முறையா????
பெருசு ஒன்னு நல்லாத்தான் கூறு
சொல்லுச்சு ...
அடியே மூணுமாசம் தாண்டுச்சுன்னா
உசிரு உன்னுது ;
இல்லன்னு போச்சுதுன்னா சாமி
திருடிச்சு ;
அப்படின்னே நெனச்சிக்கிட்டு முங்கி
மறந்துரு .
கருவுல இருந்த ஒன்னத்தான் மறக்க
முடியுமா ?
எங்க முதல் சொத்து நீ தானே மறுக்க முடியுமா
?
தடங்கூடக் கெடைக்காம இரத்த இரத்தமா
– ஓடியழிஞ்ச
முந்திரியே ஒன்ன அழிக்க நெனைச்சமா?
வயக்காட்டுல வேலை செய்யற
பூமிப்பயலுக
பயிரவிட்டு களைய மட்டும்
வெட்டியெடுப்பாங்க – என்
உயிர்த்தோப்புல வேல செஞ்ச எமப்பயலுக
களையின்னா பயிரே ஒன்ன
வெட்டியெடுத்தாங்க???
சொந்தபந்தம் வந்தெங்க மனச
தேத்துச்சு .
யப்பே! வயசான பிள்ளையவா
பறிகொடுத்தீக?
எழுவார கரு கலையிறது நடப்புதானுங்க...
சின்னஞ் சிறுசு நம்முதில்லன்னு
விட்டுத்தள்ளுங்க .
மனுசப்பய புத்தியறிஞ்ச ஒன் வயசு ...
எங்க மனசுக்கும் புரியுதா
புரியலையே! - ஏழு
வார வயசு மத்தவனுக்குத்தான சிறுசு
ஒன்ன ஒணர்ந்த எங்களுக்குமா தெரியலையே!
சத்தமில்லாத சலனமா வந்து போனியே !
இளங்காத்துல இன்னிசையா பாட வந்தியே
!
50 நாள் பனிமூட்டமா
– நீ
ஒறஞ்சு போன எங்க உசிரோட்டமா !
****************-----------------------------------------------------******************
No comments:
Post a Comment