ஓநாய் ஓட்டைகள்
முகப்புத்தகத்தில் உன்
நிழலைக்கூடப் பதிவு செய்யும்
மன உறமில்லாத நீ ...
பிறரது வாழ்க்கைப் புத்தகத்தின்
அந்தரங்கங்களைஅத்து மீறிப்
பார்க்க முனைகிறாய்!
வாழ்வியலின் அடித்தளம்
இலவசமாக வரும்
உல்லாசமும் ;
காகித காந்தி தரும்
வாசமும் எனத்
தேங்கிநிற்கும் நீ
....
அன்னை தெரசாவின்
சேவை குறித்த
வாதம் செய்கிறாய் !
உன் போன்ற
அற்ப மனிதர்களின்
கரகோஷ மயக்கத்தில்
அறிவீனக் கேலிக்கூற்றை
நஞ்சாகப் பிறர்மீது
கக்கும் நீ ....
சீர்கெட்டது சமுதாயமென்றும்
முத்தியது கலியென்றும்
அங்கலாய்த்துக் கொள்கிறாய்!
உன் சகாக்களை வீழ்த்திய
அற்ப வெற்றியில்
அவர்களை பரிகாசிக்க
எண்ணும் நீ ....
நட்பிலக்கணம் கதைக்கிறாய் !
உன்னவர் தவிர
அந்நியருக்கு
உதவும்
எண்ணமும்
நேரமும் இல்லாத நீ ....
தானதர்மக்
கதாகாலட்சேபம் செய்கிறாய் !
தாய்மொழி களைந்துக்கிடைத்த
சொற்ப வசதிகளுக்குக்
தலைவணங்கும் நீ ....
மொழிப் பிரகடனம்
புரிகிறாய்!
தன்னலமே உன்னதமென
சுயநலக் களவியல்
கொள்ளும் நீ ....
பொதுவுடமைக்
கொடி ஏற்றுகிறாய்!
இந்த நீ ....
ஆணாக இருப்பின்
இச்சமுதாயம்
பிறவிக்கறைகள்
களைந்து மோட்சக்கரை
ஏற முடியாது !
இந்த நீ ....
பெண்ணாக இருப்பின்
இச்சமுதாயம்
பிறவிக்கறைகள்
களைந்து மோட்சக்கரை \
ஏறும்
எண்ணமே கொள்ளாது !
மொத்தத்தில் நீங்கள்
சமுதாயத்தின்
ஓநாய் ஓட்டைகள் !
இயற்கையே !
மனிதனை விட
உயர்ந்தவள் என்ற எண்ணமோ ?
இருமாப்பில் திளைக்காதே !
உன் சீரழிவின்
உச்சி தானே
ஓசோன் ஓட்டை ?
மனிதச் சீரழிவின்
தொடக்கமே எங்கள்
ஓநாய் ஓட்டைகள் தான்.
ஒப்புக்கொள் !
உன் ஓசோன் ஓட்டை எங்கள்
பலகோடி ஓநாய் ஓட்டைகளை
விடச் சிறந்ததில்லை என்று !
இத்தீர்ப்பை மாற்றியளிக்கும்
நாட்டாமை கிடைத்தால்
ஓசோன் தூதனுப்பு!
தீர்ப்பு மாறி
விடாதா
என்ற ஆசையிலும்
இத்தீர்ப்பு என்றுமே
மாறாதோ
என்ற சந்தேகத்திலும்
காத்திருக்கிறோம்
!
-
இன்னும் ஓநாய்களாகாத சில
நாங்கள் !
No comments:
Post a Comment